Prophecy  
  1. உலகம் முழுவதும் தேவனுடைய கோபாக்கினையின் அக்கினி ஊற்றப்படும்.
2. உலகம் முழுவதும் தண்ணீரால் அநேக அழிவுகள் உண்டாகும்.
3. தண்ணிரிலுள்ள மீன்கள் அநேகம் செத்து விழும்.
4. கடல்கள் குமுறும் கப்பல்கள் உடையும் கடலின் சீற்றங்கள் அதிகரிக்கும். கடலின் நடு மையம் அதிக பாதிப்புக்குள்ளாகும்.
5. அநேக மலைகள் பெயர்ந்து தரைமட்டமாகும். மலைகள் பெயர்ந்து சமுத்திரத்தில் விழும். அதனால் கடல் நீர் அநேகம் ஊருக்குள் புகுந்து அநேக அழிவுகளை உண்டாக்கும்.
6. அநேக திருச்சபைகள் தேவனுடைய நாமத்தில் பரிசத்தக் தலைச்சலாக்கினதினாலே தேவனுடைய கோபம் திருச்சபையின் நடுவே ஊற்றப்படும். அநேக திருச்சபைகளின் அநேக அவலங்கள் நிறைவேறும்.
7. உலகம் முழுவதும் அநேக தேசங்களில் குற்றமற்ற இரத்தம் சிந்தப்படும். அநேகருடைய உடல் உறுப்புகள் தெருகளில் சிதறிக் கிடக்கும் பிணங்கள் குவியல், குவியலாக வீசப்படும்.
8. பூமியின் கீழ்த்திசையில் இருந்து துஷ்ட ஜாதி எழும்பும். அது அநேகருடைய இரத்தத்தில் வெறி கொள்ளும்.
9. திருச்சபையின் நடுவில் அமர்ந்து கொண்டு பணம், பதவி, பற்றி பெருமையானவைகளையும், இழிவானவைகளையும் பேசும் துஷ்டர்களை கர்த்தர் அதம்பண்ணி போடுவார்.
10. உன் தேசத்தின் கிழக்குப் பகுதியின் குதிரையின் தளம்பொலி சத்தம் கேட்கப்படும்.
11. அநேக தேசங்களில் யுத்தத்தின் சத்தங்கள் கேட்கப்படும்.
12. சிறுவர்களுக்கு எதிராக பிசாசானவன் எழும்பி அநேகரை வஞ்சிப்பான். சிறுவர்களுக்கு அதிக ஆபத்துகள் உண்டாகும்.

 
Home | Donation | Site Map | Contact Us
 
 
Copyright © Prayer Ministry 2011 - 2012. All Rights Reserved. | Staff Login | Design by Web Design Company